வடிவேலு பாணியில் பேசும் அமைச்சர், அல்வா கொடுத்த ஆட்சி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

0 2448
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அனைவருக்கும் செல்போன் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்த அதிமுக அனைவருக்கும் அல்வா தான் கொடுத்துள்ளதாக முக ஸ்டாலின் விமர்சித்தார்.

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திமுக தலைவர் தொடங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் காணை குப்பம் பகுதியில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் ஆகிய நான்கு தொகுதிகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆட்சியின் குறைகளை கண்ணை மூடிக்கொண்டு காணாமல் இருந்தால் கூட, அரசு கட்டிய கட்டுமானங்கள் இடிந்து விழும் சப்தம் காதில் கேட்கும் என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். விழுப்புரம் தடுப்பணை இடிந்து விழும் சப்தம், கரூர் மினி கிளினிக் விழும் சப்தம் போன்றவை அதிமுக அரசின் நிலையை தெரிவிப்பதாக அவர் விமர்சித்தார்.

கிணற்றைக் காணவில்லை என்று வடிவேலு பேசியது போல அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதாக குறிப்பிட்ட மு.க ஸ்டாலின் கூறினார், முன்னர் அமைச்சர் பதவியை ஏன் ஜெயலலிதா பறித்தார் என்று சி.வி சண்முகம் கூறுவாரா?? என்று கேள்வி எழுப்பினார்.

அனைவருக்கும் செல்போன் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்த அதிமுக அனைவருக்கும் அல்வா தான் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments