'பணம் இல்லாததால் யாரும் சிகிச்சையை தள்ளிப் போடக் கூடாது! '- கன்சல்ட்டிங் ஃபீஸாக ரூ. 10 மட்டுமே வாங்கும் கிருஷ்ணகிரி மருத்துவர்

0 5850

கிருஷ்ணகிரி  அருகே ரூ.10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவர் - அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல மருத்துவம் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம் என சேவையை துவங்கி உள்ளதாக கருத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகேயுள்ள மஹாராஜகடை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். எம்.பி.பி.எஸ் படித்துள்ள இவர் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் , வேப்பனஹள்ளியில் மருத்துவமனை ஒன்றை தொடங்கியுள்ள டாக்டர் லோகேஷ் அனைத்து மக்களுக்கும் ரூ. 10 வாங்கிக் கொண்டு மருத்துவம் செய்து வருகிறார். கிராம புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையில் 10 படுக்கைகள் உள்ளன. தான் சிகிச்சையளிக்குமிடத்தில் கன்சல்ட்டிங் பீஸ் 10 மட்டுமே என்றும் லோகேஷ் பேனரும் வைத்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 150- க்கும் மேற்பட்ட நோயாளிகள் இவரிடத்தில் கிசிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையை மேலும் விரிவாக்கம் செய்ய டாக்டர். லோகேஷ் திட்டமிட்டுள்ளார். மருந்து வாங்க பணமில்லையென்றாலும், தன்னால் முடிந்த உதவியை நோயாளிகளுக்கு லோகேஷ் செய்து வருகிறார். இது குறித்து டாக்டர் லேகேஷ் கூறுகையில், ''அனைத்து மருத்துவர்களும் மருத்துவ சிகிச்சையை சேவையாக புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு சிறு வயதில் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் அவதிப்பட்டேன். அதனால், என்னால் முடிந்த வரை ஏழை மக்களுக்கு உதவ இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளேன். பணம் இல்லாத காரணத்தால் யாரும் சிகிச்சை பெறுவதை தள்ளிப் போட கூடாது . இதற்காகவே, இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளேன் '' என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments