அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

0 1728
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிகவின் 21-ஆம் ஆண்டு கொடி நாளை ஒட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். அங்கு குழுமியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்த விஜயகாந்த், கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தான் சசிகலாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments