சேப்பாக்கத்தில் 2வது டெஸ்ட் போட்டியைக்காண டிக்கெட்டை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் ரசிகர்கள்

0 2196
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை காண்பதற்கு டிக்கெட்டுகளை வாங்க சேப்பாக்கத்தில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை காண்பதற்கு டிக்கெட்டுகளை வாங்க சேப்பாக்கத்தில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர்.

இப்போட்டி சேப்பாக்கத்தில் வரும் 13ம் தேதி முதல் 17 வரை நடைபெறுகிறது.

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் இரண்டாவது போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் போட்டியைக் காண கடந்த 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்திருந்தவர்கள் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments