ட்ரெய்லர், பேருந்து, கார்... அடுத்தடுத்து மோதிக்கொண்ட 130 வாகனங்கள்! டெக்சாசில் பயங்கர விபத்து!

0 2715

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு மற்றொன்று மோதி நொறுங்கின. இந்த விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்த நிலையில் முப்பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை நோக்கி வீசும் ஆர்க்டிக் கடல் காற்று காரணமாக, அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைப் பொக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் ஃபோர்ட்வொர்த்தில் உள்ள இண்டர் ஸ்டேட் 35W சாலையில், பனிப்பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. இதனால், அதிவேகத்தில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது மற்றொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார், வேன் முதல் 18 சக்கர ட்ரெய்லர்கள் வரை ஒன்றன் மீது மற்றொன்று மோதி சாலைகளில் உருண்டன. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 65 பேர் நாள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது

இந்த சாலை விபத்தால், ஃபோர்ட்வொர்த்தின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையும் போக்குவரத்துத் துறையும் இணைந்து விபத்தில் சிக்கிய வாகனங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள், ”சாலையை மறைக்கும் அளவிற்கு ஏற்பட்ட பனிமூட்டமே விபத்துக்கு காரணம். இந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர், அவசரமாக பணிக்கு சென்ற சுகாதார பணியாளர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments