சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கிராம் தங்கம் 41 ரூபாய் குறைந்து 4,483 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 328 ரூபாய் குறைந்து 35ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் கிராமுக்கு 20 காசுகள் சரிந்து 73 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோ வெள்ளி 200 ரூபாய் குறைந்து 73ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Comments