உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய 36 பேரின் உடல்கள் இதுவரை மீட்பு... 168 பேர் மாயமாகி இருப்பதால் தேடும் பணி தீவிரம்

0 1350
உத்தரகாண்ட் மாநிலம் தபோவனத்தில் மீட்புப் பணிகள் 6ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் தபோவனத்தில் மீட்புப் பணிகள் 6ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 204 பேர் மாயமாகியுள்ளனர்.

தபோவன் சுரங்கத்தில் 34 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்பதில் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் உருவாகி வருகின்றன.

சுரங்கத்திற்கு செல்லும் வகையில் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி செல்லும் திட்டம் பலனளிக்காத நிலையில், தவுலிகங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தததும் இடையூறாக மாறியது.

இதையடுத்து இரவில் மீட்புப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு, இன்று அதிகாலை மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்த 34 பேர் தவிர 168 பேரின் கதி தெரியாத நிலையில், வெள்ளம் சென்ற பாதையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments