எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள் வரும் 15ஆம் தேதி தாயகம் வருகை..!

எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்கள் வரும் திங்கட்கிழமை தாயகம் திரும்ப உள்ளனர்.
கடந்த மாதம் 11ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கிருபை என்பவருக்கு சொந்தமான படகு மூலம் 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து ஊர்காவல் நீதிமன்றம் 9பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் திங்கட்கிழமை அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என இந்திய துணைத் தூரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments