’இதுக்கு மேல கடன் வாங்க முடியாது!’ குடும்ப செலவுக்காக சிறுநீரகத்தை விற்ற போக்குவரத்து ஊழியர் - கர்நாடகத்தில் சோகம்!

0 18405

ரியாக சம்பளம் வராததால், குடும்பம் நடத்த பணம் இல்லாத கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் எனும் நோக்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே பேருந்து போக்குவரத்து சேவைக்குத் தடை விதித்தது கர்நாடக அரசு. இதனால், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போக்குவரத்துத் துறை திண்டாடியது.

இந்த சூழலில், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி பேருந்துகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும் ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக, வேலை நிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், போதிய சம்பளம் இல்லாமல் குடும்ப செலவைக் கவனிக்க முடியாமல் கடன் மேல் கடன் வாங்கிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், ’இதற்கு மேல என்னால கடன் வாங்க முடியாதுடா சாமி’ என்று கூறி தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

image

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா கரகெரே. இவர் தற்போது தாய், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கொப்பல் மாவட்டம், குஷ்டகி நகரத்தில் வசித்து வருகிறார். கங்காவதியில் உள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்த அனுமந்தா மாத சம்பளமாக ரூ.16,000 பெற்று வந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு அனுமந்தாவுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த அனுமந்தா கடன்மேல் கடன் வாங்கியுள்ளார்.

கர்நாடகாவில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டாலும், அனுமந்தாவுக்கு மாதம் ரூ.3500 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சொற்ப தொகையைக்கொண்டு சிரமப்பட்ட அனுமந்தா, குடும்பத்தை நடத்தத்  தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

இதுகுறித்து அனுமந்தா தனது முகநூல் பக்கத்தில், “எனது வீட்டில் வயதான தாய் உள்ளார். அவரது மருத்துவ செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. 3 குழந்தைகளை வளர்க்க வேண்டி உள்ளது. ரேசன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எனது குடும்பத்தைக் காப்பாற்ற எனது சிறுநீரகத்தை விற்று விட்டேன்” என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

குடும்ப செலவுக்காக, போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments