கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, கணக்கில் வராத ரூ 878.82 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

பெங்களூரில் வருமானவரித்துறை சோதனையில் 879 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் வருமானவரித்துறை சோதனையில் 879 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னணி மதுபான உற்பத்தி குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 26 இடங்களில் வருமானவரித்துறை கடந்த 9ம் தேதி சோதனை நடத்தியது.
பெங்களூரில் உள்ள முன்னணி கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து இக்குழுமத்தால் குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கிடைத்த.693 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததற்கான ஆவணங்கள் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும், முறைகேடான வழியில் ரூபாய் 86 கோடிக்கு செலவு கணக்கையும் இக்குழுமம் காட்டியுள்ளது.
மது விற்பனை மூலம் 74 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டப்படாததும், கேரளாவில் உள்ள மது உற்பத்தி ஆலையில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments