சீன அதிபர் சி ஜின்பிங்குடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு... பொருளாதாரம், மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை

0 904
சீன அதிபர் சி ஜின்பிங்குடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு.. பொருளாதாரம், மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன அதிபருடன் பேசிய ஜோ பைடன் இருநாட்டு வர்த்தகம் தொடருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முயற்சியாக இருதலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சீனாவின் முறையற்ற பொருளாதார நடவடிக்கைகள், ஹாங்காங் மீதான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து அமெரிக்க அதிபர் தமது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments