மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரசின் வெற்றி 110 சதவீதம் உறுதியானது- மமதா பானர்ஜி நம்பிக்கை

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரசின் வெற்றி 110 சதவீதம் உறுதியானது- மமதா பானர்ஜி நம்பிக்கை
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 221 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, தமது வெற்றி நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் உறுதி என்றார். பத்து கோடி மக்கள் தொகை கொண்ட மேற்குவங்கத்தில் இலவச அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்களை தமது அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
அனைத்து குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்வது எடுபடாது என்பதால்தான் மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வாக்குகளைப் பெற பாஜக முயற்சிப்பதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
Comments