உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா..! நன்மதிப்பை பெற்றிருப்பதாக குடியரசுத் தலைவர் பெருமிதம்

0 1608
உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா..! நன்மதிப்பை பெற்றிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

மிகக் குறைந்த விலையிலான கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து, உலக நாடுகளுக்கு வழங்கியதன் மூலம் ‘உலகின் மருந்தகம்’ என்ற மதிப்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தார்.

புதிதாக பதவியேற்றஎல் சால்வடார் குடியரசு, பனாமா, துனிசியா, பிரிட்டன், அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தூதர்களின் நியமனத்தை குடியரசுத் தலைவர் அங்கீகரிக்கும் நிகழ்ச்சி காணொலி வழியில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர்,இந்தியாவின் தடுப்பூசி உதவித் திட்டத்தின் கீழ், மிகக் குறைந்த விலையிலான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments