ஏழுமலையான் கோவில் விரைவுதரிசன டிக்கெட் எண்ணிக்கையை 25 ஆயிரமாக உயர்த்த முடிவு...

0 4319
ஏழுமலையான் கோவில் விரைவுதரிசன டிக்கெட் எண்ணிக்கையை 25 ஆயிரமாக உயர்த்த முடிவு... கொரோனா தொற்று குறைந்ததால் திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 25ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானின் தரிசனத்துக்காக தேவஸ்தானம் இணையதளத்தில் 300 ரூபாய் விரைவு கட்டண தரிசன டிக்கெட்டுகள் தினசரி 20ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகிற 19ந்தேதி முதல் 25ஆயிரம் டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments