கணக்கு வாத்தியார் பரிதாபங்கள்... மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்துடேனேய்யா!

0 10955

ஆகா இவ்வளோ வேலை செஞ்சும்.... மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்துடேனேய்யா என்பது போல ஒரு சம்பவம், சிங்கப்பூரில் கணக்கு பேராசிரியர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையான வகுப்புகளில் பாடம் எடுத்து பழகிய ஆசிரியர்கள் பலரும், ஆன்லைனில் பாடம் எடுக்க போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்த ஒரு ‘ஆன்லைன் பரிதாபம்’ நெட்டிசன்களை ‘உச்’ கொட்ட வைத்திருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த என்.யூ.எஸ். கல்லூரியில் கணிதத்துறையில் இணை பேராசிரியராக இருப்பவர் டோங் வாங்.

இவர் தனது மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஆன்லைனில் வகுப்பு எடுத்து வருகிறார். அப்படி அவர் எடுத்த வகுப்பு ஒன்று, யூடியூப்பில் பதிவேற்றப் பட்டுள்ளது. அதில், நெடுநேரம் மியூட்டில் போட்டு வகுப்பு எடுக்கும் கணித பேராசிரியர், வகுப்பு முடியும் தருவாயில், ஏதேனும் சந்தேகம் உள்ளதா என மாணவர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் மாணவர்கள் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. என்னடா இது ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க என்று பார்த்த போது தான் , மியூட்டில் போட்டு பாடம் நடத்திருப்பதை உணர்கிறார்.

ஆத்தி மியூட் மோடை எடுத்துட்டு, எப்போதிருந்து என் பேச்சு கேட்கல என அவர் கேட்க, மாணவர்களோ நீங்க பேச ஆரமிச்சதுல இருந்து சார் என பதிலளித்துள்ளனர்.

மாலை 6 மணிக்கு வகுப்பு துவங்கியபின், மாணவர்கள் மியூட் சமாச்சாரத்தை பற்றி எவ்வளவோ சொல்ல முயற்சித்துள்ளனர்.. ஆனால் ஆசிரியர் அதனை பார்க்காமல் இரவு 8 மணி வரை பாடம் எடுத்துள்ளார்.

குறுந்தகவலையும் பார்க்கவில்லை. சரி அவர் மொபைல் நம்பருக்கு போன் பண்ணி தகவலை தெரிவிக்கலாம் என்றால் அவர் மொபைலை எடுக்கவில்லை. தனது ஐபேடில் பாடம் எடுத்ததால், மொபைலை சைலன்டில் போட்டு தொலைவில் வைத்திருந்திருக்கிறார்.

மாணவர்களின் பதிலால் அதிர்ந்த பேராசிரியர், கடைசியில், இந்த வகுப்பை இன்னொருநாள் எடுக்கிறேன் என சொல்லி சமாளித்து வகுப்பை முடித்திருக்கிறார்.

இந்த விடியோவை பார்த்தவர்கள், பாவம் யாரு பெத்த புள்ளையோ இது.. தனியா புலம்பிட்டுருக்கு என கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments