தமிழகத்தில் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் -முதலமைச்சர்

0 2650
தமிழகத்தில் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வீடு இல்லாத தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சாலையில் பிரச்சாரத்தை துவங்கிய முதலமைச்சர், ஏழை தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இனிமேல் வீடு இல்லாத தொழிலாளர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். 

தொடர்ந்து பாண்டியன் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது 100 நாட்களில் குறைகளை தீர்த்து வைப்பேன் எனக்கூறும் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றபட வேண்டிய பிரச்சனைகள் இருந்தால் செல்போன் மூலமே சொல்லலாம் என்றும், 10 நாட்களில் 1100 என்று எண்ணுக்கு அழைத்து குறைகளை சொல்லும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், மற்ற மதத்தினர் யாரும் மற்றவர்களை புண்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார். கூட்டணி என்பது வேறு , கொள்கை என்பது வேறு என்றும் அவர் குறிப்பிட்டார். 

காங்கயம் பேருந்து நிலையத்தில் அதிமுகவுக்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்த முதலமைச்சர், மக்களின் நீண்டநாள் கோரிக்கைப்படி காங்கேயத்தில் பிரமாண்டமான காங்கேயம் காளை வெண்கலச்சிலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். 

தாராபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில், பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசால் ரத்து செய்யப்பட்ட பயிர் கடன்களை திமுக.,வினரே அதிகளவில் பெற்றிருந்ததாக கூறினார். காலையில் அவினாசியில் தொடங்கிய பிரச்சாரத்தை மாலையில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் முதலமைச்சர் நிறைவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments