அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1 முதல் துவங்கலாம் - சிபிஎஸ்இ

அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை வரும் ஏப்ரல் 1 முதல் துவக்கிக் கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை வரும் ஏப்ரல் 1 முதல் துவக்கிக் கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ எனப்படும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், , மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்த பள்ளிகள் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரிடத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியைக் களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடி வகுப்புகள், தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments