அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை 1,000 கோடி ரூபாய் நிதி வசூல் -பெஜாவர் மடாதிபதி

0 1686
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை 1,000 கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாக பெஜாவர் மடாதிபதி கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை 1,000 கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாக பெஜாவர் மடாதிபதி கூறியுள்ளார்.

ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினரும், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியுமான விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி உடுப்பியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளதாகவும், இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments