பிற மாநிலங்களுக்கான கனிம விற்பனையை கண்காணிக்க கனிமவளத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 739
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து தயாரிக்கப்படும் கற்கள், ஜல்லி உள்ளிட்டவை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படுவதாகவும்,  அவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனிம வளத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments