கொரோனா காலத்தில் நாடு ஒற்றுமையுடன் சவாலை எதிர்கொண்டது; இப்போது உலகிற்கே தடுப்பூசிகளை வழங்கி வருகிறது - பிரதமர் மோடி

0 746
ஆட்சி என்பது பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டது, அரசு என்று ஒற்றுமையை அடிப்படையாக கொண்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆட்சி என்பது பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டது, அரசு என்று ஒற்றுமையை அடிப்படையாக கொண்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற சமர்பண் திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை கூறினார்.

அரசியலில் கருத்து ஒற்றுமைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது, உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தி செய்ய வேண்டுமென பாரதிய ஜனசங்க நிறுவனர் தீன்தயாள் உபத்யாய கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். அதற்கு ஏற்ப இப்போது நாட்டிலேயே தேஜஸ் விமானம் வரை தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

கொரோனா நேரத்தில் நாடு ஒற்றுமையுடன் சவாலை எதிர்கொண்டதாகவும், இப்போது உலகிற்கே இந்தியா தடுப்பூசி வழங்கி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments