சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க 4வது நாளாக தொடரும் பணி

0 711
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜோஷிமத் பகுதியில் நீர்மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள அந்த சுரங்கத்திற்குள் 35 பேர் வரை சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவர்களை மீட்பதற்கான பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திடீரென ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், பாதுகாப்பு கருதி மீட்பு பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் குறைவான மீட்புக்குழுவுடன் மீட்பு பணி மீண்டும் துவங்கி நடைபெறுகிறது.

சுரங்கத்திற்குள் இருக்கும் சேறு, சகதியை அகற்றி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments