தமிழ்நாடு அமைச்சரவை பிப்.13ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் கூடுகிறது

இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூடுகிறது.
இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூடுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் சனிக்கிழமை காலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிதியாண்டின் தமிழக பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இடம்பெற கூடிய புதிய திட்டங்கள், குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
Comments