அரசு நிலம், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 764

அரசு நிலம், நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுமாறு, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, சென்னை ராமாபுரம் பகுதியில் சாலையை கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்திருப்பது குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை, இதனால் ஆக்கிரமிப்பை இடித்து தள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், சர்ச்சைக்குரிய பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல, ஆவடியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பான மற்றொரு வழக்கில் அரசு அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments