பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில், அதில் விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ள நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வரிகளைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய பா.ஜ.க. அரசும், ஆளும் அ.தி.மு.க. அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments