தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்

0 892
தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி மையங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை செயலர் ராஜேந்திர ரத்னு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்‍.

தடுப்பூசி முகாம்களின் கட்டமைப்பை விரிவுப்படுத்த அவர் ஆலோசனை வழங்கினார்‍.

பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த அவர், தடுப்பு ஊசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments