ஓசி சரக்கு தர மறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. தலைமறைவான இளைஞர்கள்!

0 467

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஓசி சரக்கு கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கண்ணங்குடி புறவழிச்சாலையில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் விற்பனையாளராக சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த கனகசபை என்பவரது மகன் சங்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

புதன் இரவு ஒன்பது மணியளவில் கார்த்தி மற்றும் சிவராஜ் ஆகிய இரண்டு நபர்கள் ஓசி சரக்கு கேட்டு சங்கரை மிரட்டினர். சரக்கு தர சங்கர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் திடீரென கடைக்குள் புகுந்து ஓசிக்கு சரக்கு தர மறுத்த சங்கரை சரமாரியாக பீர் பாட்டிலால் தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த சங்கருக்கு இடது கை, முதுகு இடது கால் முட்டியில் ஆகிய இடங்களில் காயம் படுகாயம் ஏற்பட்டது.

அதனையடுத்து சங்கர் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். மேலும் இதுதொடர்பாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாஸ்மார்க் கடையில் புகுந்து தாக்கிய கார்த்தி மற்றும் சிவராஜ் இருவரும் தலைமறைவானதை அடுத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புறவழிச்சாலையில் ஓசி சரக்கு கேட்டு கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments