மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்... எப்படி?

0 5229

கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த கர்ப்பிணி பூனையையின் வயிற்றை பிளேடால் கிழித்து வெளியே எடுத்து உயிரை பாதுகாத்த பாம்பு பிடிக்கும் தொழிலாளிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் பாம்புகளை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சூர் அருகேயுள்ள கொடுங்கல்லூர் என்ற இடத்தில் குடியிருப்புக்குள் வந்த பாம்பை பிடித்து விட்டு. தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்ரீ நாராயணபுரம் அஞ்சாம்பரத்தி என்ற இடத்தில் சென்ற போது, பூனை ஒன்று விபத்தில் சிக்கி சாலையில் இறந்து கிடப்பதை பார்த்தார். சாலையில் கிடந்த பூனையை அப்புறப்படுத்த ஹரிதாஸ் முயன்றார்.

அப்போது, பூனை கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. வயிற்றில் குட்டிகள் உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து ஹரிதாஸ் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று பிளேடு வாங்கி இறந்த பூனையின் வயிற்றை கிழித்து , மூன்று பூனை குட்டிகளையும் உயிருடன் வெளியே எடுத்தார். பிறகு, பூனைக்குட்டிகளை ஒரு அட்டை பெட்டியில் வைத்து தனது வீட்டுக்கு கொண்டு சென்று பராமரித்து வருகிறார். தாய் பால் இல்லாத நிலையில் லாக்டோஜன் பொடியை கலக்கி அவ்வப்போது ஸ்ரிஞ்சு மூலமாக கொடுத்து மூன்று பூனை குட்டிகளையும் வளர்க்கிறார். ஹரிதாஸின் செயலை விலங்கியல் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments