ஓசியில் மதுபானம் கேட்டு தகராறு..! தர மறுத்த ஊழியர் மீது தாக்குதல்; மர்ம நபர்கள் அட்டூழியம்

0 15515
ஓசியில் மதுபானம் கேட்டு தகராறு..! தர மறுத்த ஊழியர் மீது தாக்குதல்; மர்ம நபர்கள் அட்டூழியம்

டலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓசியில் மதுபானம் கேட்டு தர மருத்த டாஸ்மாக் கடை ஊழியரை இரண்டு பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கண்ணங்குடி புறவழிச்சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு நேற்றிரவு சென்ற இரண்டு மர்ம நபர்கள் ஓசியில் மது கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஊழியர்கள் கொடுக்க மறுத்ததால், அந்த இரண்டு பேரும் கடைக்குள் புகுந்து ஊழியர் சங்கர் என்பவரை மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த சங்கர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பிச்சென்ற இரண்டு பேர் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments