கூடுதல் எடைக்காக ஆடுகளின் வயிற்றில் பம்ப் வைத்து தண்ணீர் செலுத்தும் கொடூரம்... இறந்ததால் கண்ணீர் விடும் இளைஞர்!

0 133041

கூடுதல் எடை காட்டுவதற்காக ஆடுகளில் வயிற்றில் பம்ப் வைத்து தண்ணீர் அடித்ததால், 8 ஆடுகள் பரிதாபமாக இறந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் அரசு ஒப்பந்தத்துடன் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஆட்டு வியாபாரிகள் சிலர் ஆட்டு குட்டிகள் மற்றும் ஆடுகளை எடை கூடுதலாக காட்டி மோசடியாக விற்பனை செய்கின்றனர்.

ஆடுகளின் எடையை அதிகரிக்க பம்ப் மூலமாக அவற்றின் வயிற்றுக்குள் தண்ணீரை செலுத்துகின்றனர். ஆடுகளின் வயிறு முழுக்க தண்ணீரை நிரப்பி விவசாயிகளிடமும் , பொதுமக்களிடம் எடை அதிகமாக காட்டி விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்பனை செய்யப்படும் ஆடுகள் உயிரிழந்து விடுகின்றன.

மதுரை மாவட்டம் சாமநத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் சமீபத்தில் 8 ஆடுகளை வியாபாரிகளிடத்தில் இருந்து வாங்கியுள்ளா. இந்த ஆடுகளில் 7 உடனடியாக இறந்து போய் விட்டன. இதனால், பதறிப் போன ஜெயராமன், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றோரு ஆட்டுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடத்தின் குறையை முறையிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த ஆடு துடி துடிக்க இறந்தது. இது குறித்து ஜெயராமன் கூறுகையில், கால்நடைத்துறையினர் ஆட்டு சந்தைகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு மோசடியில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மோசடி வியாபாரிகளால் ஆடுகள் உயிரிழப்பதோடு விவசாயிகளும் நஷ்டம் அடைவதாகவும் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments