முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

0 5418
முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

துபோதையில் முதலமைச்சரின் சேலம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த செய்யாறைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

நேற்று காவல்துறை உதவி எண் 100க்கு அழைத்த மர்ம நபர், முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமாலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த தறி தொழிலாளி அன்பழகன் என்பவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments