3 நாட்களாக தொடர்ந்து உயரும் முட்டை விலை..!

0 1125
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு  நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று  20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments