இந்திய-சீன படைகளுக்கு இடையே நடந்த கால்வன் தாக்குதலில் சீன வீரர்கள் 45 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள்..! ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தகவல்

0 3474
இந்திய-சீன படைகளுக்கு இடையே நடந்த கால்வன் தாக்குதலில் சீன வீரர்கள் 45 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள்..! ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தகவல்

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடந்த மோதலில், சீன துருப்புகள் குறைந்தது 45 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள் என ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். ஆனால் தங்களது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீனா இன்று வரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் உயிரிழப்பை அம்பலமாக்கி உள்ள டாஸ், கால்வன் மோதலுக்குப் பிறகு அந்த பிராந்தியத்தில் இந்தியாவும், சீனாவும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான துருப்புக்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments