ஞாயிறன்று பிரதமர் சென்னை வருகை.. 4 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 6000 காவலர்கள் நிறுத்தம்

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அங்கிருந்து காரில் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்குச் செல்கிறார்.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, சென்னைக் கடற்கரை - அத்திப்பட்டு இடையே நான்காவது ரயில்பாதை, விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை ஆகியவற்றைத் தொடக்கி வைக்கிறார்.
ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய பீரங்கியை இராணுவத்துக்கு ஒப்படைக்கிறார். கல்லணைக் கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Comments