6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் பதில்

இன்றைய சூழலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், பள்ளிக்கு வரும் மாணவர்களின் விழுக்காடு 98.5 சதவிகிதமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை என்ற அமைச்சர் செங்கோட்டையன், அதற்கு பதிலாக 6முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Comments