கிழக்கு லடாக்கில் நிலைமை... அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்

0 1352
கிழக்கு லடாக்கில் நிலைமை... அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்

கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா சம்மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் நிலவும் சூழல் குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதியான சூழலைப் பராமரிக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், இருதரப்பு ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என எப்போதும் இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் இறையாண்மையைக் காக்க எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என நமது பாதுகாப்புப் படையினர் மெய்ப்பித்துக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். தொடர்ச்சியாக 9 கட்டங்களாக நடத்திய பேச்சுக்களின் விளைவாகப் பாங்காங் ஏரியின் வடகரை, தென்கரைப் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளச் சீனா உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த உடன்பாட்டின்படி இரு நாடுகளும் முன்களத்தில் இருக்கும் படையினரைப் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் எனவும் தற்போதே படை விலக்கம் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா பெருமளவு படையினர், படைக்கலன்கள், வெடிபொருட்களைக் குவித்ததால், இந்தியப் படைகளும் பதிலடி கொடுக்கத் தயாராக இருந்ததாகத் தெரிவித்தார்.

நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் எடுத்துக் கொள்ள இந்திய ராணுவம் அனுமதிக்காது என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபடக்கூறினார். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை இருவரும் ஏற்கவும் மதிக்கவும் வேண்டும், நிலையை ஒருசார்பாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனச் சீனாவிடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments