நெய்வேலி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - வங்கி ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு

நெய்வேலி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - வங்கி ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு
நெய்வேலி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெய்வேலி லெட்சுமி விலாஸ் வங்கியில் பணியாற்றி வந்த ரகுவரன், அஜய் கார்த்திக் மற்றும் ரகுவரனின் அண்ணன் ரெங்கராஜன் ஆகியோர் வடலூரில் இருந்து நெய்வேலிக்கு காரில் சென்றுள்ளனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் சேப்ளாநத்தம் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த போது அதே சாலையில் எதிர்புரம் வந்த லாரி முன்னால் சென்ற லாரியை முந்திசெல்வதற்காக எதிர்திசையில் வாகனம் வருவதை பார்க்காமல் வலது பக்கம் ஏறி வந்ததால், காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ரகுவரன், அஜய் கார்த்திக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
Comments