திருவனந்தபுரத்தில் 2 கி.மீ. தூரம் வரை கடலில் கலந்த கரிய நிற எண்ணெய்... கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு

0 844
திருவனந்தபுரத்தில் 2 கி.மீ. தூரம் வரை கடலில் கலந்த கரிய நிற எண்ணெய்... கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு

திருவனந்தபுரம் அருகே தொழிற்சாலையில் இருந்து பெருமளவுக்கு எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைக்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் உடைந்ததில் கடலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கருமையான எண்ணெய் கலந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய திருவனந்தபுரத்தின் அழகான கடற்கரைகள் இதனால் மூடப்பட்டு கடலோரக் காவல்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து விடக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments