"டிவிட்டர் இரட்டை வேடம் போட வேண்டாம்" - மத்திய அரசு கடும் எச்சரிக்கை

0 2955
"டிவிட்டர் இரட்டை வேடம் போட வேண்டாம்" - மத்திய அரசு கடும் எச்சரிக்கை

டிவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்று மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருபுறம் அரசின் உத்தரவுக்கு மதிப்பளிப்பது போல் கணக்குகளை முடக்கி மீண்டும் அவற்றை செயல்பட அனுமதிப்பது குறித்து டிவிட்டருக்கு இரட்டை வேடம் போட்டு நாடகமாட வேண்டாம் என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தின் கணக்குகளை கையாளும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் போராட்டம், உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் 257 கணக்குகளை கையாள்வோரை கண்டுபிடித்து அவர்களை முடக்க டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments