100 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்

0 6448
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை நீக்கி உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 100 செயலிகளை நீக்கி உள்ளது.

மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.  நீக்கப்பட்ட செயலிகள் கூகுள் விதிகளுக்கு புறம்பாக தனிநபர் விவரங்களை சேகரித்து, அவற்றை தவறாக கையாண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 2020 முதல் ஜனவரி 20, 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 100 செயலிகளை நீக்கி உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் இதே சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் இதர செயலிகள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments