இதுவரை ரூ.350.25 கோடிக்கு 1.65 கோடி டோசுகள் தடுப்பூசி வாங்கப்பட்டுள்ளது-சுகாதார அமைச்சகம் தகவல்

இதுவரை மத்திய அரசு 350 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 65 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை வாங்கி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மத்திய அரசு 350 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 65 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை வாங்கி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தடுப்பூசி வாங்க எந்த இந்திய தடுப்பூசி உற்பத்தியாளருடனும் அரசு ஒப்பந்தம் எதுவும் போடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 10 லட்சம் டோசுகள் கோவிஷீல்டு தடுப்பூசியும், 55 லட்சம் டோசுகள் கோவாக்சின் தடுப்பூசியும் வாங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எந்த மாநில அரசும் இதுவரை மத்திய அரசை அணுகவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments