ராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

0 917
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பருதிக்கட்டுவலசையைச் சேர்ந்த பால்பாண்டி என்னும் விவசாயி, திருப்புலாணி அருகே இராமநாதபுரம் மெயின் ரோட்டில் வாகன வருகையை கவனிக்காமல் திரும்ப முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆண்டிதேவன்வலசையைச் சேர்ந்த சரண் என்னும் இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக சொல்லப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில், பால்பாண்டி பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments