திருவாரூர் மாவட்டத்தில் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் பறிமுதல்

0 4150
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சில சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சில சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை, கீழக்காவாதுகுடி ஆகிய கிராமங்களில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் அரசுக்கு பாத்தியப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான  மெடோ அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் உள்ள சொத்துக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments