நகை வாங்குவது போல் நடித்து நகை பெட்டியை லாவகமாக திருடி தப்பிச் செல்லும் CCTV காட்சி
மும்பையில் நகை கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து, நகை பெட்டியை ஒருவர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மும்பை நகரில் உள்ள நகை கடைக்கு வரும் அந்த நபர், பல்வேறு டிசைன்களில் நகைகளை காட்டும்படி கடை ஊழியரிடம் கேட்கிறார். அதனை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஊழியர் கண் இமைக்கும் நேரத்தில் நகைப் பெட்டியை அந்த நபர் திருடிவிட்டு தப்பிச் செல்கிறார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments