ஜனவரி 20ல் வெளியான வாக்காளர் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கு; இறந்தவர்களின் பெயரை நீக்க மனு

0 660
ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்து, இறந்தவர்களின் பெயரை நீக்குவது உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கோரிய வழக்கில், தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சில வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம்பெற்றிருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments