ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்கும் முடிவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0 2063

கடற்படைப் பணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்ட ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைக்கும் முடிவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட், 2017ஆம் ஆண்டு பணியில் இருந்து கைவிடப்பட்டது. அதை நூறு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய ஸ்ரீராம் குழுமம், கப்பலை உடைத்துப் பாகங்களை விற்கத் திட்டமிட்டது.

இந்நிலையில் கப்பலை அருங்காட்சியகமாக மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரு குழு, அதை நூறு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்தது.

இந்த வழக்கில் கப்பலை உடைக்கும் முடிவை நிறுத்தி வைக்கவும், அதை விலைக்கு வாங்கிய ஸ்ரீராம் குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments