அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.600 கோடிக்கு மேல் நன்கொடை குவிந்தது... வெளிப்படைத் தன்மைக்காக மூன்றடுக்கு கண்காணிப்புக்கு ஏற்பாடு

0 1845
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.600 கோடிக்கு மேல் நன்கொடை குவிந்தது... வெளிப்படைத் தன்மைக்காக மூன்றடுக்கு கண்காணிப்புக்கு ஏற்பாடு

யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி, 600 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கோயில் கட்டுமனப் பணியை மேற்கொள்ளும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட், கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்கொடையை திரட்டி வருகிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நன்கொடை குறித்து வெளிப்படைத்தன்மைக்காகவும், எந்த வித தவறும் நிகழ்ந்து விடாமல் இருக்கவும், பட்டயக் கணக்காளர் குழு தலைமையில் மூன்றடுக்கு கண்காணிப்பு முறையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்காக பிரத்யேக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments