அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநில வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் மோசடி செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி... 20 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என தகவல்

0 803

அமெரிக்க மாநிலமான நெப்ரஸ்காவில் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் 80 கோடி ரூபாய் அளவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் நிதி மோசடி செய்து, அந்த மாநிலத்தின் வரலாற்றில் அதிகபட்ச பட்ச தனிநபர் மோசடியை நடத்தி உள்ளார்.

கிரேக் ஹர்பக் என்ற இவர் டோட்ஜ் கவுன்டியின் டெபுடி ஷெரீபாக இருந்தார். அப்போது அவர் நடத்தி வந்த துப்பாக்கி நிறுவனம் ஒன்றிற்கு வங்கிக் கடன்களையும் முதலீடுகளையும் வாங்கி உள்ளார். தமக்கு 12 நிறுவனங்களுடன் வியாபார தொடர்பு இருந்தது என போலி நிறுவனங்களின் பட்டியலையும் அவர் அதற்காக தயாரித்துள்ளார்.

ஒரு வங்கி மற்றும் 4 முதலீட்டாளர்களிடம் அவர் இந்த வகையில் மோசடியாக பணம் பெற்றது அம்பலமாகி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நடக்கும் விசாரணையில் ஒரிரு மாதங்களில் தீர்ப்பு வர உள்ளது. குற்றம் நிரூபணமானால் அவருக்கு 20 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments