ஜன.26 ல் நடந்த டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் பஞ்சாபில் வைத்து கைது

0 1714
ஜன.26 ல் நடந்த டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் பஞ்சாபில் வைத்து கைது

டந்த 26 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த இக்பால் சிங் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லிக்குள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டை பகுதியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்துவின் ஆதரவாளர்களை போலீசார் தேடி வந்தனர்.

அவர்களில் வன்முறையை தூண்டிய சுக்தேவ் சிங் என்பவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை 100 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று சண்டிகரில் வைத்து சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர்.

தேடப்பட்டு வந்த மற்றொருவரான இக்பால் சிங் பற்றி துப்பு கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர், நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

செங்கோட்டை வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 38 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து 126 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments