ஸ்ரீநகரில் கடும் குளிரில் உணவுதேடி வரும் அரிய வகை மான்களை பாதுகாக்க மலைப் பகுதிகளில் உணவு வைக்கும் தேசிய பூங்கா ஊழியர்கள்..!

ஸ்ரீநகரில் கடும் குளிரில் உணவுதேடி வரும் அரிய வகை மான்களை பாதுகாக்க மலைப் பகுதிகளில் உணவு வைக்கும் தேசிய பூங்கா ஊழியர்கள்..!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பனி மலைகளில் வாழும் ஹங்குல் வகை மான்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது.
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள டச்சிகாம் தேசிய பூங்கா நிர்வாகம், ஹங்குல் என்ற அரிய வகை சிவப்பு மான்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆண்டுதோறும் கடும் குளிர் நிலவும் நேரங்களில் உணவு தேடி மலை அடிவாரத்திற்கு வரும் ஹங்குல் வகை மான்கள் ஊர்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனை தடுக்கும் நோக்கில், காய்கறிகள், இலைகள் போன்ற உணவுகளை எடுத்துச் சென்று பூங்கா ஊழியர்கள் மலைப் பகுதிகளில் கொட்டி வருகின்றனர்.
Comments