சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து

0 1459

சட்டப்பேரவைக்குள்  குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது. 

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை  எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்களும்,தி.மு.க விலிருந்து நீக்கப்பட்ட கு.க செல்வமும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு கடந்த டிசம்பம் 4 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த்தை அடுத்து வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்தியநாரயணா, அவை உரிமை குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments